Sunday, 30 May 2010

Poem Behind the Picture



2 comments:

  1. அன்று நாம் நடந்த
    பாதையில்
    இன்று நான் மட்டும்
    தனியே..

    செல்லும் வழியெங்கும்
    நீ இல்லாத
    வலியே...

    வானத்தில் கலந்தாயோ
    கடலிலே தொலைந்தாயோ
    இல்லை மலைகள் இடையே
    மறைந்தாயோ?

    இலக்கில்லா
    என் தனிமை பயணத்தில்
    நான் இட்டுச் செல்லும்
    பாதச் சுவடுகள்
    மணலிலே மறையலாம்
    கடல் அலையிலே கரையலாம்.

    என் உயிரில்
    நீ விட்டுச் சென்ற
    நினைவுச் சுவடுகள்
    என் உயிர் விட்டு
    என்றும் பிரியாது...

    By Aspire

    ReplyDelete
  2. பார்க்கும் அழகு கிளிஞ்சல்கள்
    வெறும் பாதங்களுக்கு அழகில்லை,
    இதழ்களில் இருக்கும் சிரிப்பினால்
    இதயத்தின் வலிகளுக்கு அழிவில்லை.

    இணைந்ததினால்
    இனிமை தரும்,
    அமைதி உணர்த்த,
    வெண்மையில் இரு பாத அணி..

    பிரிந்ததினால்
    தனிமை தரும்,
    வெறுமை உணர்த்த,
    கருமையில் ஒரு பாத அணி...

    இணைந்திருக்கும் இதயத்தின்
    இனிமையை உலகுக்கு உரைக்க
    சங்கிடம் முழங்குகிறது
    வெண்மை....

    பிரிந்திருக்கும் உள்ளத்தின்
    வலியை உலகிடம் மறைக்க
    சருகிடம் அழுகிறது
    கருமை..

    கருமையில் உள்ள
    வெண் கோடுகள்
    அவை கண்ணீரில்
    வந்த உப்பின் வெண்மையோ?

    ReplyDelete

SHARE AND THEN FEEL THE EXPERIENCE